கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்: 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது - மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தடயவியல் ரிப்போர்ட் வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும் என்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது, “கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் முபின் என்ற நபர் தீக்காயங்களுடன் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்களை பாதுகாத்து அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணையும் நடந்து வருகிறது.

உயிரிழந்த நபர் யார் என்று 12 மணி நேரத்தில் உயிரிழந்த நபரை கண்டறிந்துள்ளோம். வெடித்து சிதறிய கார் 10 பேரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது யுஏபிஏ (Unlawful Activities (Prevention) Act) எனப்படும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், உபா சட்டம் ஆகிய பிரிவுகளிலும் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக 20 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சந்தேகப்படும் நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர்களை கண்காணித்தும் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.



இதுவரை நடந்த புலன் விசாரணை அடிப்படையில் முபின் காரில் வந்த போது, அப்பகுதியில் காவல் துறை பீட் இருந்ததால் தப்பிச் செல்ல முயன்ற போது சிலிண்டர் வெடித்து இருக்கக் கூடும். கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், வேறு யார், யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த முபின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர். அவர் கேரளா சென்று வந்துள்ளார். எதற்காக சென்று வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். யுகங்கள் அடிப்படையில் பல தகவல்கள் சென்று கொண்டுள்ளது. தடயவியல் ரிப்போர்ட் வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியுள்ளது. முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர், 3 கேன் டிரம் உள்ளிட்டவை காரில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில், என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்து தடயவியல் ரிப்போர்ட்க்கு அனுப்பியுள்ளோம்.

அவரது வீட்டிலிருந்து 3 பேர் சிலிண்டர் தூக்க உதவி செய்துள்ளனர். ஒருவர் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். ஒருவர் காரினை தயார் செய்து தந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோவை மாநகரில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...