இருளுடன்‌ போராட வேண்டாம்‌; ஒளி வந்தால்‌ இருள்‌ தானாக நீஈ்கிவிடும்‌ - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: இருள்‌ என்னும்‌ அறியாமையுடன்‌ போராட வேண்டாம் தெளிவு என்னும்‌ ஓளியை ஏற்றினால்‌ அறியாமை என்னும் இருள்‌ தானாக மறைந்துவிடும்‌ என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அறிக்கையில், கலாச்சார நீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர்‌ வதம்‌ செய்த தினமாகவும்‌, வனவாசம்‌ முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள்‌ தபங்களுடன்‌ வரவேற்ற தினமாகவும்‌ கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில்‌, இந்நாள்‌ அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும்‌ வெற்றியை பெறும்‌ சாத்தியத்தை குறிக்கும்‌ நாளாகும்‌. தபம்‌ என்றால்‌ வெளிச்சம்‌. பொதுவாக வெளிச்சம்‌ தெளிவோடும்‌, இருள்‌ அறியாமையோடும்‌ ஒப்பிடப்படுகிறது.

இருள்‌ என்பது வெளியில்‌ இருந்தாலும்‌, நமக்குள்‌ இருந்தாலும்‌ நம்‌ கண்‌ முன்‌ இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும்‌ வீட்டில்‌ விளக்கேற்றும்‌ தினம்‌ கிடையாது. நமக்குள்ளும்‌ விளக்கு ஏற்ற வேண்டும்‌.

வீட்டில்‌ விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள்‌ இருககிறது. மின்‌ விளக்குகள்‌ இல்லாத காலத்தில்‌ எண்ணெய்‌ விளக்கு என்பது மிகவும்‌ முக்கியமான விஷயமாக இருந்தது.

அப்போது சூரியன்‌ மறைந்த பிறகு விளக்கின்‌ தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன்‌ முக்கியத்துவத்தை நீங்கள்‌ உணர வேண்டுமென்றால்‌, தீபாவளி நாளன்று மின்‌ விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய்‌ விளக்குகளை வீட்டில்‌ ஏற்றுங்கள்‌.

அப்படி செய்தால்‌, அதன்‌ தாக்கத்தையும்‌ ஆனந்தத்தையும்‌ நீங்கள்‌ உணர்வீர்கள்‌. அது வீட்டின்‌ சூழ்நிலையையே மாற்றிவிடும்‌. பூஜை அறையில்‌ தினமும்‌ எண்ணெய்‌ விளக்குகளை ஏற்றினால்‌, உங்கள்‌ ஆரோக்கியமும்‌ மேம்படும்‌.

வெளியில்‌ மட்டுமின்றி உங்களுக்கு உள்ளும்‌ வெளிச்சம்‌ வரவேண்டும்‌. உங்களுக்குள்‌ தெளிவை ஏற்படுத்த ஈஷாவின்‌ மூலம்‌ பல யோக கருவிகளை நாங்கள்‌ இலவசமாக வழங்குகிறோம்‌. அதனை நீங்கள்‌ பயன்படுதீதி கொள்ளலாம்‌.

அறியாமை என்னும்‌ இருளை நீக்குவதற்கு அதனுடன்‌ நீங்கள்‌ போராட கூடாது. இருள்‌ நிறைந்த ஒரு இடத்தில்‌ ஒரு ஒளி விளக்கை ஏற்றினால்‌, இருள்‌ காணாமல்‌ போய்விடும்‌.

அதேபோல்‌, தெளிவு பிறந்தால்‌ அறியாமை இல்லாமல்‌ போய்விடும்‌. இந்த தீபாவளி திருநாள்‌ உங்கள்‌ வாழ்வில்‌ ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும்‌ என்னுடைய ஆசை, என்னுடைய அருள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...