மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நூதன நிபந்தனைகளுடன் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் காரமடையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினமும் 10 குறள்கள் வீதம் 10 நாட்களுக்கு 100 குறள்கள் படிக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனைகளுடன் நீதிபதி சுரேஷ்குமார் ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 31ம் தேதி சாலையோரத்தில் சவுண்டமுத்து என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தனியார்கல்லூரி மாணவர்கள் (ஹரி, மணிகண்டன், முத்து) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம்நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவினை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் மூன்று பேருக்கும் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தனியார் கல்லூர் மாணவர்கள் மூவரும் தினமும் 10 குறள்கள் வீதம் 100 குறள்களை அதற்குரிய விளக்கத்துடன் மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ் குமார் தனது உத்திரவில்  தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...