கோவை வடவள்ளியில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி - சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

வடவள்ளி அடுத்த நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில், விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்சங்கர் (46) - நந்தினி (45) தம்பதி. இவர்களது மகன் ரவி கிருஷ்ணா கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கல்லூரி நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் காலை அங்கிருந்து நண்பர்களுடன் காரில் வீடு திரும்பியுள்ளது. அப்போது, அவர்களது கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சஞ்சீவ் சங்கர் - நந்தினி தம்பதியினர் தங்களது ஓரே மகனை பறிகொடுத்த துக்கத்தில் இருந்த இருவரும் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துனர்.

ஆனாலும் துக்கம் தாக்காமல் இருந்த தம்பதி, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 2 நாட்களுக்கு முன்பு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனிடையே செல்போன் அழைப்பை எடுக்காததால், சந்தேகத்தில் நந்தினியின் சகோதரன் அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...