கோவையில் ஈஷாவின் வழிகாட்டுதலில் 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு விற்பனை செய்து விவசாயிகள் சாதனை..!

ஆனைமலை பகுதியில் சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் மொத்தம் 306 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தென்னை மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டும் அப்பகுதியில் விளையும் பிரதான பயிர்கள் ஆகும். இதில் ஜாதிக்காய் சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ சிகிச்சைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை உடையது. இந்நிலையில், இந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இருக்கும் 40 விவசாயிகள்

ஒன்றிணைந்து முதல் முறையாக ஏற்றுமதி வர்த்தகரிடம் நேரடியாக பேசி சிறந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.



இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான ரஞ்சித் பேசியதாவது, “ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத் தரகர்களுக்கு எங்களுடைய விளைப்பொருட்களை விற்று வந்தோம்.

அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை கூறி வாங்கி வந்தனர். ஆனால், இப்போது முதல் முறையாக எங்களுடைய உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் வர்த்தகரை நேரடியாக தொடர்பு கொண்டு அதிக லாபத்திற்கு விற்பனை செய்துள்ளோம்.

FPO-வினால் எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். இனி இதேபோல் நேரடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று அங்கு நடந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இதன்மூலம், ஜாதிக்காயை மொத்தமாக விற்பனை செய்வதற்கு தரம் பிரிப்பது மற்றும் விற்பனைக்கு அனுப்புதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை அறிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...