வ.உ.சி அடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் களமிறங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை இன்று காவல் துறையினர் திடீரென தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலால் தமிழகம் முழுவதும் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஒருவார காலமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்களை விரட்டும் முயற்சியில் இன்று காலை காவல்துறையினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



இதனால், சிதறியோடிய இளைஞர்களும், மாணவர்களும் கோவையின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.









மேலும், தங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தும் காவல்துறையை கண்டிப்பதாக தெரிவித்த இளைஞர்கள் பேருந்துநிலையத்தில் இருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தற்போது அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இதனால்,காந்திபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...