கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் பிறந்தநாள் தமிழகத்தின் பல இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ஏ.வா.வேலு, காந்தி, தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் மாதவரம் சுதர்சனம், மாவட்டக் மாவட்ட கழக செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு "காலத்தின் நாயகன் கலைஞர்" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார் அதனை ஆ.ராசா பெற்றுக்கொண்டார் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது உருவப...

ஜிசாட் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் இன்று மாலை...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. இதேபோல, மேகாலயாவில் காங்கி...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க த...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: சித்தராமையா அழைப்பு

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு வி...