ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 3200 ரஷியர்கள் சேர்ந்துள்ளனர்: அரசு தகவல்

சிரியா மற்றும் ஈராக்கில் போரிட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ரஷியவை சேர்ந்த சுமார் 3200 பேர் இணைந்துள்ளதாக ரஷியாவின் வெளியுறவுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷியாவின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை (புதிய அச்சுறுத்தல் மற்றும் சவால்கள் பிரிவு) இயக்குனர் ஈயா ரோகாச்சேவ், ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சியால் உலகிற்கு விடப்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டத்துக்கு சிரியாவும், ஈராக்கும் முக்கிய களங்களாக திகழ்கின்றன எனவும் தெரிவித்துள்ள இவர், ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப்பயிற்சி பெற்று போராடிவரும் சுமார் 3200 ரஷியர்களால், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...