சிங்கப்பூரில் போதை மருந்து கடத்திய இருவருக்குத் தூக்கு

சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சிஜியோக் ஸ்டீபன் ஒபியோகா, (38). கால்பந்து வீரராக சிங்கப்பூருக்கு வந்த அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 2.7 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டார்.
அதேபோல், மலேசியாவைச் சேர்ந்த தேவேந்திரன் சுப்ரமணியம் (31). கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2.7 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 83.36 கிராம் ஹெராயின் போதை மருந்தாகும்.
சிங்கப்பூர் சட்டப்படி 500 கிராமுக்கு மேல் போதை மருந்து வைத்திருந்து பிடிபடும் நபருக்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2.7 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பாக தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க, இருவரும் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களது கருணை மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொலை, போதை மருந்து கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...