அமைச்சரவையை தேர்வு செய்யும் பணியை தொடங்கினார் டிரம்ப்


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவையைத் தேர்வு செய்யும் பணியைத் துவக்கியிருக்கிறார். அட்டார்னி ஜெனரல் பதவியை, தனது நெருங்கிய கூட்டாளியான அலபாமா செனடர் ஜெஃப் செஷன்ஸுக்கு வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர், கடந்த 1986-ஆம் ஆண்டு, ரொனால்டு ரீகனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், இன ரீதியான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களால் அது நிராகரிக்கப்பட்டது.

கன்சர்வேடிவ் கட்சியின் தேநீர் விருந்து இயக்கத்தோடு தொடர்புடையவரான கான்சாஸ் காங்கிரஸ் உறுப்பினர் மைக் போம்பியோ, சிஐஏ அமைப்பின் அடுத்த இயக்குநராக இருப்பார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை, ஓய்வு பெற்ற ஜெனரல் மைக்கேல் ஃபிளினுக்கு அளிக்க டிரம்ப் முன்வந்துள்ளார். முஸ்லிம்கள் பற்றிய அச்சம் நியாயமானது என்று ஃபிளின் சமீபத்தில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...