டொனால்டு டிரம்புடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்து பேசினார். மன்ஹட்டன்  நகரில் உள்ள டிரம்ப் டவரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.

இந்த  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அபே, நம்பிக்கையின் அடிப்படையில் உறவை கட்டமைக்க முடியும் என்று இந்த சந்திப்பு என்னை உறுதியாக நம்ப வைத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசியதால் பேச்சுவார்த்தை இடம் பெற்ற அம்சங்கள் குறித்து நான் வெளியிட முடியாது. நம்பிக்கை இல்லாமல் கூட்டு ஏற்படாது. அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் நம்பகமான தலைவர் என்று தற்போது நம்பிக்கை உள்ளது. பேச்சுவார்த்தை தெளிவான முறையில் இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.இரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, அபேவுடன் ஒரு மொழிபெயர்ப்பாளரும் டிரம்புடன் அவரது மகள் இவாங்காவும் உடன் இருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப் ஜப்பானுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஜப்பான் அணு ஆயுதம் வாங்குவது குறித்து கவலை தெரிவித்த டிரம்ப், அமெரிக்க படைகள் வெளி நாட்டு மண்ணில் இருக்க வேண்டும் என்றால் அதிக தொகை செலுத்த வேண்டும் அல்லது படைகள் வாபஸ் பெற நேரிடலாம் என பேசி இருந்தார்  அதேபோல் அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டமைப்பான டிரான்ஸ்- பசுபிக் கூட்டுறவு (TPP) க்கு எதிராகவும் பேசி இருந்தார். டிரான்ஸ்-பசுபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமாவுடன் ஷின்சே அபே மிகவும் நெருக்கமாக பணியாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...