சிரியாவில் ரஷ்ய வான் வழி தாக்குதலில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி மீட்பு

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசின் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போரிட்டு வருகின்றனர்.

சிரியாவின் முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள்  தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ரஷ்யா படைகள் களத்தில் இறங்கின.

ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்படாததால் அலெப்போ நகரை காப்பாற்ற இரு அரசு படைகளும் நுழைந்தன.அரசு படை தாக்குதலில்  பொது மக்கள் 54 பேர் கொல்லபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ரஷ்யா நேற்று அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவாக கதிஜா என்ற சிறுமி  வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோவையும் அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் காதிஜா அவருடைய வீட்டின் இடுபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளார். இதைக் கண்ட பாதுகாப்பு படையினர் முதலில் அச்சிறுமியின் தலையில் ஹெல்மெட்டை வைத்தனர்.

அதன் பின்னர் பொறுமையாக இடுபாடுகளுக்கு மத்தியில் இருந்த அவரை மீட்டு அவசர அவசரமாக முதலுதவி கொடுப்பதற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அச்சிறுமி வலி தாங்க முடியாமல் அழுவதும், மூக்கு மற்றும் வாய்பகுதியில் இரத்தம் வழிந்ததால் பதற்றமடைந்த பாதுகாப்பு படை வீரர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தார்.

தற்போது கதிஜா நன்றாக உள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும், சிரியாவின் கிழக்கு பகுதியில் இதுவரை நடத்திய தாக்குதலின் விளைவாக 87 பேர் இறந்துள்ளனர். அதில் 4 குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...