அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை: இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே அறிவிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு ஆதரவளிப்பேன் என்றும் தெற்கு கரோலினா மாகாணத்தின் குடியரசு கட்சி ஆளுநர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்கரான ஹாலே கூறும்பொழுது, மக்களின் நம்பிக்கை மீது மிக பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.  அதனை நான் எப்பொழுதும் கூறி வந்துள்ளேன்.  ஜனாதிபதிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன.

இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து இந்த தேர்தலில் தோல்வி அடைந்த டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகினார்.  இதனால் டிரம்ப் உத்தேச வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஜான் காசிக் விலகியதை அடுத்து டிரம்ப் அதிகாரபூர்வ வேட்பாளராகியுள்ளார்.  வருகிற ஜூலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...