நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் போர் பயிற்சி

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப் முன்னிலையில் அந்நாட்டு ராணுவத்தினர் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீர், உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதிகள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில்  பாகிஸ்தான் வீரரகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் அருகே, தங்கள் நாட்டு பகுதியான காயிர்பூர் மற்றும் டேம்வாலி பகுதியில் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி முகாமிற்கு ராத் உல் பார்க் என பெயரிடப்பட்டுள்ளது. இப்போர் பயிற்சியில் நவீன பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் போன்ற அனைத்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த போர் பயிற்சியானது பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ரஸீல் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை பார்வையிட்டு நவாஸ் ஷெரீப் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும்  எதிரிகளை சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த போர் பயிற்சியானது நடந்து முடிந்துள்ளது. அதனால் பாதுகாப்பு குறித்து  நாம் கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தான் எந்த ஒரு நிலையிலும்  வலியப்போய் போர் தொடுக்காது’’ என்றார். பாகிஸ்தானின் இந்த திடீர் பயிற்சியால், எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...