தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை -ஹிலாரி கிளிண்டன் வருத்தம்

அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் தோல்வியடைந்தார்.

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-

அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டி உள்ளது. எனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே நான்  விரும்பவில்லை. இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

'தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இதுவரை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்'

இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...