காபூலில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படையினர் நடத்திய மோட்டார் வாகன குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குண்டூஸ் மாகாணத்தின் மஸார்-இ-ஷெரீஃப் நகரில் உள்ள ஜெர்மன் தூதரகம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய சரக்கு வாகனத்தை மோதச் செய்து தலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...