சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரம் மீட்பு

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அலெப்போ நகரை ஒட்டி, அல் பாப் பகுதியில் குவாபாசிப் என்னும் சிரியாவுக்கு சொந்தமான நகரத்தை கைப்பற்றி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு துருக்கி நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வந்தனர்.

இந்த நகரத்தை மீட்பதற்காகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை இங்கிருந்து விரட்டுவதற்காகவும் சிரியாவில் உள்ள அஹ்ரார் அல் ஷாம் உள்ளிட்ட உள்நாட்டு குர்திஷ் இனப்போராளிக் குழுக்கள் சமீபத்தில் அதிரடி தாக்குதலை தொடங்கின. துருக்கி ராணுவமும் அவர்களுக்கு துணையாக இருந்தது.

இந்த கூட்டுப்படையினர் நேற்று பின்னிரவு, அல் பாப் பகுதியை ஒட்டியுள்ள குவாபாசிப் நகரத்தை கைப்பற்றி விட்டதாகவும், அல் பாப் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் படைகள் முன்னேறி வருவதாகவும், இங்கு முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...