டிரம்பிடம் சீன அதிபர் வலியுறுத்தல் வலிமையான நல்லுறவுக்கு ஒத்துழைப்பு அவசியம்

 à®¨à®¾à®Ÿà¯à®•ளிடையேயான நல்லுறவுக்கு சீனா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அவசியம் என புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள  டொனால்ட் டிரம்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்து கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த  நிலையில் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது ஜின்பிங் பேசியதாவது: கடந்த 37 வருடமாக சீனா, அமெரிக்கா இடையே உள்ள ராஜ்ய உறவுமூலம் இரு நாட்டு மக்களும்  ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளனர். உலகத்தில் சீன வளர்ந்து வரும் நாடாகவும், அமெரிக்கா வல்லரசாகவும் உள்ளது.

எனவே வலிமையான பொருளாதாரத்தை பெற்றுள்ள இருநாடுகளும் உலக அமைதிக்காக இணைந்து பணியாற்றுவது அவசியம். வலிமையான  இரு நாடுகளின்  ஒத்துழைப்பே வலிமையான நல்லுறவுக்கு வழிகாட்டியாக உள்ளது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சீனா  தொடர்ந்து அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜின்பிங் தெரிவித்தார். அப்போது பேசிய டிரம்ப், ‘‘அமெரிக்கா சீனா  இடையேயான உறவு மற்றும் இருநாடுகளுக்கும் கிடைத்த பலன்களை ஒப்புக்கொள்கிறேன். இருநாடுகள் இடையே  வலிமையான உறவு  நீடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...