56 வருட கலை சேவையை பாராட்டி ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர்

 à®ªà®¿à®°à®ªà®² நடிகர் ஜாக்கி சானுக்கு அமெரிக்காவில் நடந்த விழாவில் கவரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் நடிகர் ஜாக்கி சான். தனது அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காமெடி முலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை  வசியப்படுத்தியவர். நடிகர், இயக்குனர், சண்டைக் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஜாக்கி சானுக்கு தற்போது 62  வயது. தனது ஐந்து வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கிய அவர், இப்போது 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு சினிமா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு உலகின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது  இதுவரை கிடைத்ததில்லை. 56 வருடமாக சினிமா துறையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு  கவுரவ விருது வழங்க, ஆஸ்கர் கமிட்டி முடிவு  செய்தது. அதன்படி, 8வது கவுரவ ஆஸ்கர் விருது வழங்கும் வண்ணமிகு விழா, அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நேற்று முன்தினம் இரவு  நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால் மாஸ்டர் மற்றும்  ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி கவுரவ ஆஸ்கர் விருது  வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின்  ஜாக்கிசான் பேசியதாவது: 23 வருடங்களுக்கு முன் சில்வஸ்டர் ஸ்டாலோனை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது  ஆஸ்கர் விருதை அங்கு பார்த்ததில் இருந்து அதை வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடைசியாக இப்போது ஆஸ்கர் அகாடமியின்  தலைவர் ஐசாக் அழைத்து விஷயத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. எனது 56 வருட சினிமா வாழ்வில், 200 படங்களுக்கு  மேல் நடித்துவிட்டேன். படங்களுக்காக எனது எலும்புகள் பலவற்றை உடைத்து, கடைசியாக இந்த விருதை பெற்று விட்டேன்.  ஹாலிவுட்டுக்கு நன்றி. பல விஷயங்களை அது எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதோடு என்னை கொஞ்சம் பிரபலமாகவும் உருவாக்கி  இருக்கிறது. இங்கு இப்போது கவுரவிக்கப் பட்டிருக்கிறேன். இவ்வாறு ஜாக்கி சான் கூறினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...