அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்ற குறிவைக்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளி யேற்றப்படுவார்கள் என பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்து இருந் தார்.

தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

“அமெரிக்காவில் ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரிமினல்களாகவும் உள்ளனர். பலர் மீது கிரிமி னல் ரெக்கார்டுகள் உள்ளன.

கூலிப்படையினராகவும், போதை பொருள் விற்பனை யாளர்களாகவும் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேர் வரை உள்ளனர்.

பிரசாரத்தின் போது கூறிய வாக்குறுதிப்படி அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.அல்லது சிறையில் அடைக் கப்படுவார்கள்” என்றார். இந்த நடவடிக்கைகள் அவர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றபின் நடை முறைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...