துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு பதிவு செய்ய ஜெர்மனி ஆய்வு

கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பது பேரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை 18 வயது இளைஞருக்கு விற்பனை செய்ததற்காக ஜெர்மனியிலுள்ள ஓர் ஆயுத விற்பனையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிலிப்பி கே என்ற அந்த சந்தேக நபர் அவருடைய மெத்தனத்தால் கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டுவதற்கு அரச தரப்பு வழங்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.

இரகசிய இணையதளத்தின் மூலம் துப்பாக்கிதாரி டேவிட் சோன்போலி இந்த துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். ஆனால், பொதுவாக ஆயுத விற்பனையாளர் தனிப்பட்ட முறையில் அந்நபரை சந்தித்து தான் அதனை வழங்குவார்.

இந்த துப்பாக்கிதாரியின் நோக்கத்தை ஆயுதம் விற்றவர் கணித்திருக்க முடியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனி மற்றும் இரான் என இரு குடியுரிமை கொண்டசோன்போலி மெக்டோனல் உணவகத்தில் எவ்வித நோக்கமுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

பின்னர், வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்க வந்திருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தன்னைதானே சுட்டு உயிரிழந்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...