அமெரிக்க குடியுரிமையை சீரமைக்க 10 அம்ச திட்டம் அறிமுகம்: டிரம்ப் முதல் அறிவிப்பால் இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்கிறார். அதற்கு முன் தனது நிர்வாக திட்டத்தை தயாரித்து வருகிறார். அமைச்சர்கள் நியமனம் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருகிறார். முதல்கட்டமாக தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி அமெரிக்க குடியுரிமை திட்டத்தை சீரமைப்பது தொடர்பாக டிரம்ப் அமைத்த நிர்வாக குழுவினர் 10 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி சில நாடுகளுக்கு விசா உரிமையை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன என்று அந்த குழுவினர் அறிவித்து உள்ளனர். அணுஆயுதம், சைபர் தாக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசாரத்தின் போது  எச்-1 பி விசா திட்டம் மாற்றி அமைக்கப்படும் என டிரம்ப் கூறினார். அதன்படி இந்திய மதிப்பில்  மாதம் ரூ. 67 லட்சம் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா  வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதுவும் 10 அம்ச திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று  அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...