பாலைவனம் சூழ்ந்த துபாயில் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட கால்வாய் திறப்பு

பாலைவனம் சூழ்ந்த துபாய் நகரம் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றதோடு தற்போது புதிய அடையாளமாக பிரம்மாண்ட கால்வாயும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. துபாயில் 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு திர்ஹம்ஸ் 270 கோடி செலவில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் பிஸினஸ் பே பகுதியில் அமைந்துள்ள கால்வாயுடன் ஜுமைரா பகுதியை இணைக்கும் வகையில் புதிய நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழுவதும் நிறைவுபெற்றது. இந்த கால்வாய் பகுதி துபாய் கடல் பகுதியில் தொடங்கி  ஜுமைரா சாலை, அல்வாசல் சாலை சபா பூங்கா ஆகிய பகுதிகளை கடந்து பிசினஸ் பே பகுதியை அடையும்.

இதன் தொடக்க விழா துபாயில் நடைபெற்றது.புதிய கால்வாயை துபாய் ஆட்சியாளரும், அமீரக பிரதமருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் திறந்து வைத்தார்.துவக்க நாளன்று கால்வாய் பகுதி லேசர் ஒளிகதிர் மூலம் வண்ணமயமாக மின்னியது தற்போது அமைக்கப்பட்டுள்ள 3.2 கிலோ மீட்டர் கால்வாய் மூலம் ஏற்கெனவே பிஸினஸ் பே பகுதியில் உள்ள கால்வாயையும் சேர்ந்து பெரிய அளவில் கால்வாய் விரிவடைந்து உள்ளது. இதன் மூலம் துபாயில் நீர் வழி போக்குவரத்து அதிகரிக்கும். கால்வாயில் 5 இடங்களில் படகு நிறுத்தும் இடங்கள் உள்ளது. 5 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய் துபாய் நகருக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...