அதிபர் ஒபாமாவை சந்தித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அதிபர் தேர்தல்:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். 

டிரம்ப் வெற்றி:

மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க அதிபராக முடியும். இதில், டிரம்ப், 279 தேர்வு குழு உறுப்பினர்களையும், ஹிலாரி, 218 தேர்வு குழு உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஒபாமா அழைப்பு:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் வெள்ளை மாளிகைக்கு வர டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று, வெள்ளை மாளிகை சென்ற டிரம்ப் அதிபர் ஒபாமாவை சந்தித்தார். 

தலையாய கடமை:

சந்திப்புக்குப் பின் ஒபாமா தெரிவித்ததாவது: டிரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவின் வெற்றி. ஆட்சி நிர்வாகத்தை சுமூகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கவுரவம்:

டிரம்ப் தெரிவிக்கையில், அதிபர் ஒபாமாவை சந்தித்தது தனக்கு கிடைத்த கவுரவம் எனக்கூறினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...