45வது அதிபர் டிரம்புக்கு மோடி, தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: புதிய அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா-அமெரிக்கா உறவு புதிய வரலாறு படைக்கும்.

பிரதமர் மோடி: அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இணைந்து செயல்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பிரசாரத்தின் போது இந்தியாவை பற்றி உயர்வாக பேசியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைய அதிபர் ஒபாமா: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெள்ளை மாளிகைக்கு இன்று வரும்படி வரவேற்கிறேன். இதன்படி, டிரம்ப் இன்று வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமெரிக்கா-ரஷ்யா உறவு இனிமேல் மேம்படும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே: கடின பிரசாரத்திற்கு பின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யும் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாடுகளும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களிலும் இந்த நட்பு தொடரும் என நம்புகிறேன்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்: ஜனநாயக முறைப்படி ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும். புதிய அதிபர் டிரம்ப்புடன் இணைந்து செயலாற்றும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூகாங்: புதிய அமெரிக்க அதிபர் தலைமையில் இருநாட்டு உறவுகள் மேம்படும் என்று நம்புகிறோம். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்: நீங்கள் பெற்றுள்ளது சரித்திர வெற்றி. அமெரிக்க மக்கள் விடுதலை, ஜனநாயகம், மனித உரிமை மீது நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின்: அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புடன் இணை்ந்து செயல்பட காத்து இருக்கிறோம்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...