பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை தடை செய்வதில் காலதாமதம், ஐ.நா.விற்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க மாத கணக்கில் காலம் எடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்தியாவிற்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், பயங்கரவாத இயக்கத்தின் தலைவருக்கு தடைவிதிக்கும் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற தன்மைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மசூத் அசாரை தடை செய்ய ஏன் இத்தனை தாமதம்? என்று இந்தியா கேள்வி எழுப்பியது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தன்னுடைய காலத்தடை மற்றும் அரசியலில் முடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சையத் அக்பருதீன் பேசுகையில், சில பிரந்தியங்கள் அல்லது பிரிதொரு இடங்களில் ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தும் போது நம்முடைய கூட்டு மனசாட்சியை சிதைத்தாலும், பயங்கரவாத அமைப்புகள் என்று தங்களை அடையாளப்படுத்திய அமைப்புகளின் தலைவர்களை தடை செய்ய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் 9 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. எப்போதும் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டேதான் இருக்கிறது, ஆனால் நாம்மால் தடைகளை உடைக்க முடியவில்லை. உலகத்தின் தற்போதைய (பயங்கரவாத) சூழ்நிலைக்கு எதிராக ஒரு அமைப்பு செயலிழந்து கிடக்கும் அமைப்பை சீரமைப்பதில் உள்ள தடைகளை உடைக்கவேண்டிய நேரம் இதுவாகும்.

மனிதாபிமான சூழ்நிலையில் பதிலளிக்க முடியாமை, பயங்கரவாதிகள் எச்சரிக்கைகள் மற்றும் அமைதிப் பணிகளுக்கு பாதிப்பு
ஆகியவை முக்கியமான விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் செயல்பாட்டில் பற்றாக்குறை நிலவுவதற்கான விலையாகும்.

சிரியா போன்ற மிக முக்கிய விவகாரங்களில் நெருக்கடிகளில் செயலின்மை, தெற்கு சூடானில் அமைதியை காப்பதில் நெருக்கடி, இந்த விவகாரங்களில் நாம் ஏற்றுக் கொண்ட, ஒப்புக் கொண்ட நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தன்னுடைய காலத்தடை மற்றும் அரசியலில் முடங்கியுள்ளது. தற்போதைய காலத்தின் மிக முக்கியமான தேவைகளை கூட கருதாமல் முடங்கியுள்ள இதனை நாம் சீர்த்திருத்துவது அவசியமாகும். ஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் அமைப்பில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.

இது 70 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு, இப்போதும் அதன் அடிப்படையில் செயல்படுவது அதன் மீதான நம்பகமின்மையை அதிகரித்துள்ளது. எனவே இந்த முடக்கத்தை உடைக்க சரியான தருணம் இதுவே” என்றார்

மசூத் அசார் விவகாரம்; பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவனான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தி வைத்திருப்பது இன்றுவரையில் புரியாத புதிராக உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தடையை ஏற்படுத்தி வருகிறது.

பதன்கோட் விமானப்படை தளம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் முறையிட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் சீனா இதை ஏற்கவில்லை. மசூத் அசார் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நினைத்ததை சாதித்து விட்டது.

பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடைவிதிக்க தொழில்நுட்ப வேறுபாடுகளை காரணம் காட்டி சீனா நிறுத்தி வைத்தது. 6 மாதங்கள் செல்லுபடியாகும் என்ற நிலையில் மீண்டும் செப்டம்பரில் சீனா தடையை ஏற்படுத்தியது. மூன்று மாதங்களுக்கு தடை நீடிக்கப்பட்டு உள்ளது.  பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளோம் என்று கூறும் சீனா தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத கொள்கைக்கு துணை போகிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி மசூத் அசாரை ஐ.நா. தடை செய்ய முட்டுக்கட்டை போடக்கூடாது சீன அதிபரிடம் பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆனால் சீனா அதனை காதில் வாங்கவில்லை.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...