ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி

கிர்குக்: ஈராக்கில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். மேலும், 50 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக அரசு படைகளுக்கும், அதை தக்க வைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை  à®¨à®Ÿà®¨à¯à®¤à¯ வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக் அரசு படைகள் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா நகரங்களில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

திக்ரித் நகரின் நுழைவு வாயில் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் சமரா நகரில் கார் பார்க்கிங்கில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...