நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை பாகிஸ்தான் ’திடீர்’ முடிவு

பெஷாவர்: நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை என்று பாகிஸ்தான் திடீரென அறிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் போரின் போது ஷார்பத் குலா என்ற பெண் தனது 12-வது வயதில் பாகிஸ்தானுக்கு அகதியாக குடிபெயர்ந்து அகதிகள் முகாமில் இருந்துள்ளார். அப்போது பச்சை நிற கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவரை பிரபல ’நேஷனல் ஜியாகிராபிக்’ பத்திரிகை புகைப்படக்காரர் படம் பிடித்து ’ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அந்த பத்திரிகையின் அட்டையில் வெளியிட்டார். இதன் மூலம் அவர் உலக பிரபலம் ஆனார். பின்பு அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் ஷார்பத் குலா பாகிஸ்தானில் போலியான அடையாள அட்டையுடன் தங்கி இருந்ததாக பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

 

இந்த வழக்கு விசாரணையின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனையும், பாகிஸ்தான் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் (நமது நாணய மதிப்புப்படி சுமார் ரூ.74 ஆயிரம்) அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை காலம் முடிந்ததும் அவரை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். தன்னுடைய இறந்த கணவர் ரக்மத் குல் கடந்த 1988-ம் ஆண்டு தேசிய அடையாள அட்டையை பெற்று இருந்தார், இதன் மூலம் முகவருக்கு லஞ்சம் கொடுத்து அடையாள அட்டையை வாங்கினேன் என்று குலா கூறிஉள்ளார்.

இதுதொடர்பாக அக்டோபர் 20-ம் தேதி பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை என்று பாகிஸ்தான் திடீரென அறிவித்து உள்ளது.

குலாலின் 15 நாள் தண்டனை புதன் கிழமையுடன் முடிவு அடைகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாண அரசு அதிகாரி யூசுப் சாய், குலால் நாடு கடத்தப்பட மாட்டார் என்று அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாகாண அரசு நிறுத்துவிட்டது.  à®ªà®¾à®•ிஸ்தான் தெரிக் -இ- இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், குலாலை நாடு கடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மாகாண முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் மனிதநேயத்தின் அடிப்படையில் நாடு கடுத்தும் முடிவு நிறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகள் விவகாரத்தை பாகிஸ்தான் கடந்த 30 வருடங்களாக எதிர்க்கொண்டு வருகிறது. இதுவரையில் சுமார் 3 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...