அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மேடை முன் துப்பாக்கியுடன் மர்ம நபர் இருந்ததால் பரபரப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை தூக்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரம்பையும் மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றனர். 



இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர் வெளியேற்றப்பட்ட பிறகு பிரச்சார மேடைக்கு திரும்பிய டிரம்ப், எந்தவிதமான மிரட்டலுக்கும் தாம் அடிபணிய போவதில்லை என்றார். தமது பயணம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் எங்களுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என யாரும் கூற முடியாது என்றார். எனது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...