நேட்டோ படைகள் வான்வழி தாக்குதல் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பிராந்தியமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது  இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து ஆப்கன் படைகள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தலிபான்கள் இருந்த பகுதியில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.  

இதனிடையே வான்வழி தாக்குதல் நடத்தியதை நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது. உடன் இருந்த படைகளை பாதுகாப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் நேட்டோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் கவர்னர் அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...