பாகிஸ்தானில் பயங்கரம்: பெண்ணின் கண்ணை தோண்டி எடுத்து, காலை வெட்டிய சகோதரர்கள்

லாகூர்: பாகிஸ்தானில் பெண் ஒருவரை அவரது சகோதரர்களே கடத்திச் சென்று கத்தியால் கண்ணை தோண்டி எடுத்த கொடூரம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கரை சேர்ந்த 40களில் இருக்கும் பெண் ஒருவரை அவரது சகோதரர்கள் இரண்டு பேர் சேர்ந்து கடத்தி கத்தியால் கண்களை தோண்டி எடுத்துள்ளனர். மேலும் அவரின் பாதங்களையும் வெட்டியுள்ளனர்.

அந்த சகோதரர்களில் ஒருவரின் மகளை காணவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். தன் மகளை தனது சகோதரி கடத்திவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் தான் அவர் தனது மற்றொரு சகதரருடன் சேர்ந்து இப்படி ஒரு கொடுமையை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த பெண் முல்தானில் உள்ள நிஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளபோதிலும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...