மாயமான மலேசிய விமானம் விமானியால் மூழ்கடிக்கப்பட்டதா? விமான பாகங்கள் ஆய்வில் பகீர்

சிட்னி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் மாயமானது. இதை தேடி ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தான்சானியா அருகே மலேசிய விமானத்தின் இறக்கை மீட்கப்பட்டது. மேலும் 20 சிறிய பாகங்கள் ஆப்ரிக்க கடலோர பகுதிகளில் மீட்கப்பட்டன. இவற்றில் 3 மட்டுமே மலேசிய விமானத்தின் பாகங்கள். இவற்றின் மூலம் முக்கிய தகவல் கிடைக்குமா என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. 

விமான இறக்கையில் உள்ள பிளாப் தகடுகளை ஆய்வு செய்தபோது, அவை விமானம் தரையிறங்கும்போது இருக்கும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. செயற்கைக்கோளுடன் விமானத்துக்கு இருந்த கடைசி தகவல் தொடர்பை ஆராய்ந்த போதும், மிக உயரமான நிலையில் இருந்து வேகமாக கீழே இறங்கியது  à®¤à¯†à®°à®¿à®¯à®µà®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯. இதனால் விமானம் கட்டுப்பாடின்றி திடீரென வேகமாக தரையிறங்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், மலேசியா விமானம் அதன் விமானியாலேயே வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...