இந்தோனேசியாவில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி!

இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுப்பகுதியில் இன்று காலை பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள்.

இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுப்பகுதியில் இருந்து 93 பயணிகளுடன் பயணிகள் படகு ஒன்று இன்று காலை மலேசியா நோக்கி புறப்பட்டது. அந்த படகு தஞ்சுங் பேபாம் என்ற இடத்திற்கு அருகே வந்த பொழுது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 20 பேர் பலியானர்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படகில் அதிகப்படியான நபர்கள் ஏற்றப்பட்டதும், கடுமையாக காற்று வீசியதுமே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...