மொசூல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமான சண்டை

மொசூல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன. இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமான சண்டையில் அவை ஈடுபட்டுள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் பின்னடைவு.

ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் கொடி கட்டிப்பறந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், சமீப காலமாக பலத்த பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஈராக்கில் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரமும், சிரியாவில் ராக்கா நகரமும்தான் அவர்கள் கைவசமுள்ள முக்கிய நகரங்கள் ஆகும். மற்றபடி, அவர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த இடங்களை ஒவ்வொன்றாக அரசு படைகளிடம் பறி கொடுத்து விட்டனர்.

மொசூலை மீட்க சண்டை

இந்த நிலையில், மொசூல் நகரை அவர்களிடம் இருந்து மீட்பதற்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஈராக் படைகள் முன்னேறி வந்தன. இரு தரப்பிலும் உக்கிரமான சண்டை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் ஈராக் படைகள், மொசூல் நகருக்கு மிக அருகே வந்தன. அவர்களின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல இடங்களிலும் தீ வைத்து வந்தனர். அதன் புகை நெடியை உணர முடிந்ததாக ஈராக் படையினர் தெரிவித்தனர்.

தொழில் மாவட்டம்

இருப்பினும், நேற்று முன்தினம், மொசூல் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில் மாவட்டம் ஒன்றை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஈராக் படையினர் மீட்டனர்.

கோக்ஜாலி கிராம பகுதியில் ஈராக் படையினர் கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை நோக்கி எந்திர துப்பாக்கிகளாலும் சுட்டனர்.

பாஸ்வாயா கிராமத்திலும் ஈராக் படைகள் முற்றுகையிட்டன. அங்கு நடத்தப்பட்ட குண்டுவீச்சின் காரணமாக பெரிய அளவில் புகை சூழ்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறின.

மொசூலில் நுழைந்தன

இந்த நிலையில் நேற்று மொசூல் நகருக்குள் முதல்முறையாக ஈராக் படைகள் நுழைந்து விட்டதாக பி.பி.சி. கூறி உள்ளது. இதுபற்றி அதன் செய்தியாளர் அயன் பேனல் கூறும்போது, 'ஈராக்கின் பயங்கரவாத தடுப்பு படையினர் தெற்கில் இருந்து முன்னேறினர். மொசூல் நுழைவாயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து அவர்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தனர்' என்றார்.

இதற்கிடையே மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கடுமையான வான்தாக்குதலும் நடத்தப்படுகின்றன.

இதன்காரணமாக மொசூல் நகரத்தில் இடைவிடாது குண்டு வெடிப்புச்சத்தம் கேட்டவண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் கரும்புகை சூழ்ந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் எச்சரிக்கை

இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி கடும் எச்சரிக்கை விடுத்து அரசு தொலைக்காட்சியில் பேசினார்.
அப்போது அவர், 'ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அவர்கள் சரண் அடைய வேண்டும். இல்லையேல் அவர்கள் செத்து மடிய வேண்டும்' என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, 'எல்லா கோணத்திலும் நாம் அவர்களை நெருங்கி விட்டோம். கடவுள் விருப்பப்படி பாம்பின் தலையை நசுக்குவோம்' என்று குறிப்பிட்டார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...