ஒபாமா மனைவிக்கு அமைச்சர் பதவி: சொல்கிறார் ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவுக்கு, அமைச்சர் பதவி வழங்க தயாராக இருக்கிறேன்,'' என, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 8ல் நடைபெறவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இருவரும், இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிலாரி கிளிண்டனின் பிரசார கூட்டங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் பங்கேற்று, ஆதரவு திரட்டி வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற பிரசாரத்தில், மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதையடுத்து, மிச்சேலுக்கு அமைச்சர் பதவி அளிக்க, ஹிலாரி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹிலாரி கூறியதாவது: ஒபாமா, அதிபராக பதவி வகித்துள்ள எட்டு ஆண்டுகளில், அவரது மனைவி மிச்சேலின் பணிகள் முக்கியமானவை; அரசு நிர்வாகத்தில் ஒபாமாவுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி, பெண் கல்வி உள்ளிட்டவற்றில் மிச்சேல் ஆர்வமுடையவர். அதிபராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக உள்ளேன்; அவர் தயாராக இருந்தால் முக்கிய அரசு பொறுப்புகளை ஏற்று பணியாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலுக்கு பதில் பதவி:

அமெரிக்க அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் பதவி வகித்த போது, அவரது மனைவியான ஹிலாரி, அரசு பணிகளில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா, முதன்முறை அதிபரானவுடன், வெளியுறவு அமைச்சர் பதவியை ஹிலாரிக்கு வழங்கினார். ஜனநாயக கட்சியின் தற்போதைய வேட்பாளர் ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க முன் வந்துள்ளார்.

டிரம்ப் முன்னிலை:

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, 'ஏ.பி.சி., நியூஸ்' நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், டிரம்ப்புக்கு, 46 சதவீதம் பேரும், ஹிலாரிக்கு, 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், முதன்முறையாக, ஹிலாரியை விட, டிரம்ப் கூடுதலாக, ௧ சதவீத ஆதரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...