இந்தியாவில் இருந்து 4 தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் திரும்ப பெறுகிறது

இந்தியாவில் இருந்து 4 தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் யங்கரவாதிகள் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை நடத்தி,  இந்தியா மீது மறைமுக போரை திணித்து வருகிறது. அத்துடன் புதிதாக இந்தியாவில் மாபெரும் உளவு வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு உளவு தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உளவாளிகள் 3 பேர் 26–ந்தேதி காலை 10 மணிக்கு டெல்லி உயிரியல் பூங்காவில் சந்தித்து முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் பரிமாறி கொள்ளப்போவதாக முந்தைய நாளில் (25–ந் தேதி) போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசின் அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தான் உளவாளிகள் மெக்மூத் அக்தர், மவுலானா ரம்சான்கான் என்ற ஹஸ்ரத் மற்றும் சுபாஷ் ஜாங்கிர் கைது செய்யப்பட்டனர்.  

அவர்களிடம் இருந்து ராணுவ ரகசிய வரைபடங்கள், குஜராத் மற்றும் சர் கிரீக் (இது இந்தியாவையும், பாகிஸ்தானையும் நீரினால் பிரிக்கிற 96 கி.மீ. நீள எல்லைப்பகுதி. குஜராத்தின் கட்ச் பகுதியையும், பாகிஸ்தானின் சிந்து பகுதியையும் பிரிக்கிறது) பகுதிகளில் அமர்த்தப்பட்டுள்ள படையினர் பற்றிய விவரங்கள், ஓய்வு பெற்ற, இட மாறுதல் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை, ராணுவ உயர் அதிகாரிகள் பட்டியல், விசா தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 உளவாளிகளையும் போலீசார் ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டுபோய் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது மெக்மூத் அக்தர் தான் இந்திய குடிமகன் என்றும், தன் பெயர் மகபூப் ராஜ்புத் என்றும் கூறினார். தான் டெல்லி சாந்தினி சவுக், லால் குவான் பகுதியில் வசிப்பதாக கூறி, அதற்கு சான்றாக போலி ஆதார் அட்டை ஒன்றை காண்பித்தார். பின்னர் அவர்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போதுதான் மகபூப் ராஜ்புத் என்று கூறி, அடையாள அட்டையை காட்டியவர் மெக்மூத் அக்தர் என்பது அம்பலத்துக்கு வந்தது.

அது மட்டுமல்ல, அவர் ‘‘நான் பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு தூதரக ரீதியிலான சிறப்பு விலக்கு உரிமை இருக்கிறது’’ என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அத்துடன் அதற்கு ஆதாரமாக அவர் தனது தூதரக அடையாள அட்டையை அளித்தார்.

அது உண்மையான அடையாள அட்டைதான் என்பது வெளியுறவுத்துறை அமைச்சரகம் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அவர் பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

உளவு வேலையில் ஈடுபட்டதால் மெக்மூத் அக்தர், இனி பாகிஸ்தான் தூதரக பணியில் நீடிக்க தகுதி இல்லை என்று இந்தியா முறைப்படி அறிவித்து விட்டது. அதைத் தொடர்ந்து மெக்மூத் அக்தரும், அவரது குடும்பத்தினரும் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

திரும்ப பெறுகிறது

இந்தியா தூதரக அதிகாரியை பாகிஸ்தான் தூதரக பணியில் நீடிக்க தகுதி இல்லை என்று அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் 4 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற பாகிஸ்தான் முடிவு செய்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப பெறவது தொடர்பான விஷயம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டான் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சையத் பரூக் ஹபிப் மற்றும் முதன்மை செயலாளர்கள் காதீம் ஹுசைன், முதாஸ்சார் சீமா மற்றும் ஷாஹித் இக்பால் என்று கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...