பார்லி., தேர்தலில் தோல்வி; ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து பார்லிமென்ட்டுக்கு நடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை ஏற்று தற்போதைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஐஸ்லாந்து பார்லிமென்ட் தேர்தல், இரு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், ஆளும் சுதந்திர கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பசுமை கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்தது. இணையதள சுதந்திரம், நேரடி ஜனநாயகத்தை வலியுறுத்தி, பைரேட்ஸ் கட்சியும் போட்டியிட்டது. மொத்தம் 63 பார்லி., சீட்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பைரேட்ஸ் கட்சி 10 இடங்களிலும், எதிர்க்கட்சியான பசுமை கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆளும் சுதந்திரக்கட்சி வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது.

இதனையடுத்து அந்நாட்டின் தற்போதைய பிரதமர் சிகுர்துர் இங்கி ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பைரேட்ஸ் கட்சி கடந்த தேர்தலில் 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது,

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...