எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரம் : இந்தியா, இலங்கை நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி  மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகள் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதில், இலங்கை தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட மீனவ சங்கத்தினர் பங்கேற்க, வரும் 2ம் தேதி டெல்லி வர உள்ளதாக இலங்கையின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் சமரவீரா, அமரவீரா ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச இருப்பதாகவும், இந்திய, இலங்கை மீனவர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...