பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாக சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு ஏற்பாடுகளை பயங்கரவாத இயக்க தலைவர்கள் பார்வையிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

பாக்.,ல் 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்துள்ள நிலையில் அங்கு பயங்கரவாதிகள் மாநாடு நடக்க உள்ளது. இதனையடுத்து பாக்., பார்லி., கட்டிடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தை சுற்றி பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...