கருவில் இருந்த குழந்தை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 2 முறை பிறந்த அபூர்வ குழந்தை

அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர்ப் மார்கரேட் ஹகின்ஸ். இவர் கருவுற்றிருந்தார். இந்த நிலையில் கருவுற்று 16 வாரங்கள் ஆன நிலையில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் அவரை சோதித்த போது மார்கரேட் வயிற்றில் இருந்த குழந்தைக்கு   கட்டி (sacrococcygeal teratom)ஒன்று உருவாகி  குழந்தையின் ரத்த ஓட்டத்தை தடுத்து அதனால் குழந்தையின் இதயம் செயலிழக்கும் அபாயத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் 23வது வாரம் ஆகும் போது அந்த இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர். இதனால் குழந்தையை காப்பாற்ற ஒரு வித்தியாசமான  முடிவை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.

பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவமானது மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...