மலேஷியாவில் தீ விபத்து: 3 இந்தியர்கள் பலி

கோலாலம்பூர்: மலேஷியாவில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மூன்று இந்தியர்கள் உட்பட, ஆறு பேர் உடல் கருகி பலியாயினர்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர், குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜோஹர் பஹ்ரூவில், சுல்தான் ஷா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில், அவசர சிகிச்சை பிரிவில், நேற்று காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது; அடுத்தடுத்த தளங்களுக்கும், தீ வேகமாக பரவியது.

இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை மீட்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்; மற்ற தளங்களில் இருந்த நோயாளிகள், அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்தில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர்; அவர்களில், இரு பெண்கள் உட்பட மூன்று பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

மலேஷியாவில் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதால், பலியானோரில், தமிழர்களும் இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்ததுடன், உள்ளே சிக்கியவர்களையும் மீட்டனர்; நோயாளிகள் அனைவரும், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு, மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் உத்தரவிட்டு உள்ளார்; தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...