மசூத் அசார் உள்ளிட்ட 5,100 பயங்கரவாதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

இஸ்லாமாபாத்: பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் தடுப்பு காவலில் உள்ள ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 5,100 பயங்கரவாதிகளின் வங்கிக்கணக்குகள் முக்கப்பட்டுள்ளது. ரூ.400 மில்லியன் பணம் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில் உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை தொடர்ந்து, நாங்கள் மசூத் அசார் மற்றும் அவரது மகன் அல்லா பக்ஸ் உள்ளிட்ட பல பயங்கரவாதிகளின் வங்கிக்கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம் என்றார். தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் ஆயிரகணக்கான பயங்கரவாதிகளின் வங்கிக்கணக்குகள் குறித்த விபரத்தை உள்துறை அமைச்சகம் 3 பட்டியலாக சமர்ப்பித்திருந்தது. என அந்த அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1997ல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்படி, அபாயகரமானவர்களாக கருதப்படும் 1200 பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அசாரின் பெயரும் உள்ளது. பதன்கோட் தாக்குதலை தொடர்ந்து, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள முகமது அசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு ஐ.நா.,விற்கு இந்தியா கடிதம் எழுதியது. இதனையடுத்து அவர் தடுப்பு காவலில் பாகிஸ்தான் அரசு வைத்ததை தொடர்ந்து அவர் அபாயகரமானவர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர், மாத துவக்கத்தில், தேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பு 5,500 பேர் பட்டியலை வங்கிக்கு அனுப்பியதாக கூறினார். 5000 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை தேசிய பயங்கரவாத தடுப்பு மையமும் உறுதி செய்துள்ளது. முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் மொத்த மதிப்பு ரூ.400 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகளில், 3,078 வங்கிக்கணக்குகள் கைபர் பக்துன்க்வா மற்றும் படா பகுதியை சேர்ந்தவை. 1,443 வங்கிக்கணக்குகள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவை. சிந்து பகுதியை சேர்ந்த 226 பேரின் வங்கிக்கணக்குகளும், பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த 193 பேரின் வங்கிக்கணக்குகளும், கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை சேர்ந்த 106 பேரின் வங்கிக்கணக்குகளும், இஸ்லாமாபாத்தை சேர்ந்த வங்கிகக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...