205.5 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் முடிவு

சாவ் பாவ்லோ: இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை) அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

லஞ்சம்:

பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா, டோம்னிக் குடியரசு, சவூதி அரேபியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை அமெரிக்க கோர்ட் (எஸ்.இ.சி.,) விசாரித்து வருகிறது.

விற்பனை:

இந்தியாவுடன் 3 விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2008ம் ஆண்டு எம்பயர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரூ.1,391 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய தரப்புக்கு ரூ.36 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் டோம்னிக் குடியரசு (8 விமானங்கள்), சவூதி அரேபியா (3 விமானங்கள்), மொசாம்பிக்(2 விமானங்கள்) விற்பனை செய்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு சுமார் ரூ.555 கோடி லாபம் அடைந்ததாகவும் எஸ்.இ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்:

இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது.

எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...