அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர சாலை விபத்து : 13 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திலே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த பெரிய டிராக்டர் ஒன்றின் மீது மோதியது.

இதில் ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 31 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேசிய மருத்துவர் ரிகார்ட், படுகாயமடைந்தவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அவர்களுக்கு பல கட்டங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விபத்து குறித்து கலிபோர்னியா போக்குவரத்து துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...