பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களை தனியாக செயல்பட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் துறைக்கான செயலாளர் (பொறுப்பு) ஆடம் சுபின் கூறியதாவது:

பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நாட்டிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. குறிப்பாக சில அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அனைத்துத் தீவிரவாத அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடவும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எனினும், தேவைப்பட்டால், தனியாகவே செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை அழிக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...