மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டு சிறை

கலிபோர்னியா: அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான், 41; இவன், தன் மகளை, 2009 - 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்; போலீசார், ஜானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.

தந்தைக்கு வருத்தம் கிடையாது:

வழக்கை விசாரித்த நீதிபதி, எட்வர்ட் சர்கிசியனிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம்: என்னை, உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தந்தை, அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை பலாத்காரம் செய்தார். சிறுமியாக இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை; நான் அடைந்த வலி மற்றும் வேதனைக்காக, ஒரு போதும் என் தந்தை வருத்தம் அடைந்தது கிடையாது. இவ்வாறு, அந்த பெண் வாக்குமூலம் அளித்தார். 

வாழ அருகதையற்றவன்:

இந்த வழக்கில், ஜானுக்கு, 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். நீதிபதி கூறுகையில், “குற்றவாளி, இந்த உலகில் வாழவே அருகதையற்றவன்; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவன். இவன், வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும்,'' என்றார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...