ஈராக்கில் மனிதகுண்டு தாக்குதல் 16 பேர் பலி

ஈராக்கில் குர்தீஷ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் கிர்குக்.  இதன் அருகே உள்ள டிபிஸ் என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரான் நிறுவனம் அமைத்து வருகிறது. நேற்று காலை உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு துப்பாக்கியுடன் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அதிகாரிகள் 12 பேர், 4 ஈரான் இன்ஜினியர்கள் கொல்லப்பட்டனர்.இதேபோல் கிர்குக் நகரில் போலீஸ் கட்டுபாட்டு மையத்திலும் 4 தீவிரவாதிகள் புகுந்தனர்.

ஒருவன் குண்டுகளை வெடிக்கும் முன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் போலீசார் சுற்றிவளைத்ததால் குண்டுகளை வெடிக்கச்செய்து பலியானார்கள். இதனால் கிர்குக் நகரில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...