ஜெனீவாவில் அலெப்போ நகரின் நிலை குறித்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு

சிரியாவின் அலெப்போ நகரின் நிலைகுறித்த அவசர கூட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை இன்று நடத்த உள்ளது.

கிழக்கு அலெப்போவில் காயமடைந்த பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சமயத்தில் இப்படியான ஒரு அவசர கூட்டம் ஜெனிவாவில் நடைபெற உள்ளது.

கடந்த வியாழனன்று, ரஷ்யா அறிவித்த ஓர் மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள தொண்டு நிறுவனங்கள் நம்புகின்றன.

ஆனால், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லேவ்ராவ், அலெப்போவைவிட்டு பொதுமக்கள் வெளியேறுவதை போராளி குழுக்கள் தடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

பொதுமக்களுடன் போராளிகளும் வெளியேறுமாறு ரஷ்யா விடுத்திருந்த கோரிக்கையை போராளிகள் நிராகரித்துள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...