ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

மேற்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவாகியுள்ளது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டரில் அமைந்திருந்த வீடுகள் குலுங்கியதாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை. என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், வீடுகள் குலுங்கியதால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

முன்னதாக, ஜப்பானில் கடந்த 2011, மார்ச் மாதம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையமும் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ஜப்பானின் குமமோட்டோ பகுதியில் 2 கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 1.700 முறைக்கும் மேல் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...