அதிபர் தேர்தல் விவாதம்: ஹிலாரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி


லாஸ் வேகஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது விவாதத்திலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்தபின், அதன் முடிவை ஏற்பது குறித்து, டிரம்ப் கூறிய கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம், 2017 ஜனவரி, 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அதையடுத்து, அமெரிக்காவின், 45வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர், 8ல் நடக்க உள்ளது.

நேரடி விவாதம்:

இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68; குடியரசு கட்சி சார்பில், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70, போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலையொட்டி, இரு வேட்பாளர்களுக்கும் இடையே நேரடி விவாதம் நடத்தப்பட்டது. முதல் இரண்டு விவாதத்திலும், ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், மூன்றாவது விவாதம், லாஸ் வேகஸ் நகரில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. பல்வேறு விஷயங்களில், அதிபரானால் தங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், டிரம்பை விட, ஹிலாரிக்கு, 13 சதவீத கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன.

கூடுதல் ஓட்டுகள்:

இந்த விவாதத்தில் ஹிலாரி சிறப்பாக செயல்பட்டதாக, 52 சதவீதம் பேரும், டிரம்புக்கு ஆதரவாக, 39 சதவீதம் பேரும் ஓட்டளித்திருந்தனர். இதன் மூலம், மூன்று விவாதங்களிலும், டிரம்பை விட, ஹிலாரி கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளார். முன்னதாக நடந்த விவாதங்களில், டிரம்பை விட, நியூயார்க் நகரில், 35 சதவீதம்; செயின்ட் லுாயிஸில், 23 சதவீதம் கூடுதல் ஓட்டுகளை ஹிலாரி பெற்றார். இதற்கிடையே, 'பிரெய்ட்பார்ட்' என்ற அமைப்பு நடத்திய, மற்றொரு, 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பில், ஹிலாரிக்கு, 59 சதவீதமும், டிரம்புக்கு, 40 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. பிரெய்ட்பார்ட் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் பானன், டிரம்பின் பிரசார குழுவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று விவாதங்களும் முடிந்த நிலையில், தங்களுக்கே வெற்றி என, இரு தரப்பும் கூறி வருகின்றன.

'தேர்தல் முடிவை ஏற்பது குறித்து பின்னர் முடிவு':

லாஸ் வேகஸில் நடந்த, 90 நிமிட விவாதத்தின் போது, 'அதிபர் தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் அதை ஏற்பீர்களா?' என, டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், ''இது குறித்து இப்போது எதையும் கூற விரும்பவில்லை. உங்களையெல்லாம் சஸ்பென்சில் வைத்திருக்க விரும்புகிறேன்; தேர்தல் முடிந்ததும் கூறுகிறேன்,'' என்றார். டிரம்பின் இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, அமெரிக்க தேர்தலில், தோல்வி அடையும் வேட்பாளர், அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஆதரவு தெரிவிப்பார். ஆனால், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கியதில் இருந்து, தில்லுமுல்லு நடந்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். பத்திரிகைகள் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், உளவு அமைப்பான, எப்.பி.ஐ., ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அடுக்கடுக்காக பல புகார்களை டிரம்ப் கூறி வந்துள்ளார். அதனால் தேர்தல் முடிவை டிரம்ப் நிராகரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.டிரம்பின் இந்தக் கருத்துக்கு, விவாதத்தின் போது, ஹிலாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''நம் ஜனநாயகத்துக்கு அவமரியாதை செய்து விட்டார்,'' என, ஹிலாரி கூறினார்.டிரம்பின் பேச்சுக்கு, பல்வேறு பத்திரிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...